மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சி!
Monday, April 8th, 2019
யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகளவிலான மரக்கறி வகைகள் கிடைப்பதனால், மரக்கறிகளின் விலைகள் 60 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, கறிமிளகாய் கிலோ ஒன்றின் விலை 60 முதல் 65 ரூபா வரையிலும், கத்தரிக்காய் கிலோ ஒன்றின் விலை 30 முதல் 35 ரூபா வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், பூசனிக்காய் கிலோ ஒன்றின் விலை 10 முதல் 12 ரூபாய் வரையும், பீட்ரூட் கிலோ ஒன்றின் விலை 20 முதல் 25 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றிக் கொள்வதற்கு மார்ச் 31வரை கால அவகாசம் !
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் முத்திரை மற்றும் நாணயம் ஜனாதிபதியிடம் ...
பருவகாலங்களில் அறுவடை செய்யப்படும் நெல்லை 95 முதல் 110 ரூபாவுக்கு இடையில் கொள்வனவு செய்ய நடவடிக்கை -...
|
|
|


