வடக்கில் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை!
Tuesday, June 1st, 2021
வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமைமுதல் ஒரு மாத காலத்திற்கு கட்டம் கட்டமாக மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அந்தவகையில் யாழில் ஜம்புகோளப்பட்டினம், காட்டுப்புலம், குசுமாந்துறை மற்றும் மாதகல், மாதகல் இறங்குதுறை ஆகிய பகுதிகளில் இன்று முற்பகல் 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்தடை அமுல்படுத்தப்பட்டது.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு, செக்கட்டிப்புலம் வீடமைப்புத்திட்டம், கற்பகபுரம், மூன்று முறிப்பு, பெரியகாடு, பூவரங்குளம், சாளம்பைக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு மின்தடை அமுலாகியிருந்தது.
இந்நிலையில், நாளை புதன்கிழமையும் யாழ் மாவட்டத்தில் இளவாலை, மாரீசன்கூடல், மெய்கண்டான், பெரியவிளான், சேந்தன்குளம் ஆகிய பகுதிகளில் முற்பகல் 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், அதே காலப்பகுதியில் வவுனியாவில் ஒக்போபுர, கொக்கெலிய, மகாமயிலங்குளம், நொச்சிமோட்டை, பரன்னாட்டன்கல், ஓமந்தை, புதியசின்னக்குளம், சமணங்குளம், சாந்தசோலை, தரணிக்குளம் ஆகிய பிரதேசங்களிலும் இவ்வாறு மின்தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106