வசீம் தாஜூடினின் கொலை வழக்கு : அனுர சேனநாயக்கவின் பிணை நிராகரிப்பு!

Wednesday, August 10th, 2016
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க ஆகியோரின் பிணை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை கோரிக்கையை இன்று கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் நிராகரித்துள்ளார்.   மேலும் இவர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் கொலை வழக்குத் தொடர்பில், சாட்சிகளை மறைக்க முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, இவர்கள் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106