சதொச நிலையங்கள் ஊடாக 1,000 ரூபாய் நிவாரணப்பொதி – அமைச்சர் பந்துல குணவர்தன!
Saturday, May 29th, 2021
சதொச விற்பனை நிலையங்கள் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய பொருட்களுடன் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர், இந்த பொதிகளில் 10 அத்தியாவசிய பொருட்கள் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
அதன்படி வெள்ளை நாட்டு அரிசி, சிவப்பு அரிசி, கோதுமை மா, பருப்பு, நூடில்ஸ்,சீனி, 200 கிராம் கருவாடு, 100 கிராம் தேயிலை, ஒரு பக்கெட் உப்பு மற்றும் முக்கவசம் ஆகியவை அடங்கும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
தேர்தலை நடாத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே - தேர்தல்கள் ஆணைக்குழு!
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 54 பேர் கைது!
நாட்டின் பொருளாதாரத்திற்கு நிகராக கிராமிய பொருளாதாரத்தையும் மீள உயிர்பிக்க வேண்டும்- ஜனாதிபதி ரணில்...
|
|
|


