வெடித்துச் சிதறும் நிலையில் எரிமலை! 172 குழந்தைகள் உட்பட பலர் மாயம்!

Saturday, May 29th, 2021

கொங்கோவின் எரிமலை அமைந்துள்ள பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. எனவே எந்த நேரத்திலும் எரிமலை பெரிய அளவில் வெடித்துச் சிதறலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

ஆபிரிக்க நாடான கொங்கோவில் உலகின் சக்தி வாய்ந்த எரிமலைகளில் ஒன்றான நயிரா கொங்கோ எரிமலை உள்ளது. 5 நாட்களுக்கு முன்பு இந்த எரிமலை பயங்கரமாக வெடித்துச் சிதறியது.

அதில் இருந்து லாவா குழம்புகள் வெளியேறி அருகிலுள்ள கோமா நகருக்குள் புகுந்தது. அதில் லாவா குழம்புகள் தாக்கியும், அதில் உருவான நச்சுப்புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 32 பேர் பலியாகினர். 172 குழந்தைகள் உட்பட பலரைக் காணவில்லை. அவர்களிலும் பலர் எரிமலைக் குழம்புக்குள் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எரிமலை பாதிப்பால் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்கத்து நாடான ருவாண்டாவில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் எரிமலைப்பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

எனவே எந்த நேரத்திலும் எரிமலை பெரிய அளவில் வெடித்துச் சிதறலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே கோமா நகரின் ஒரு பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறும்படி கொங்கோ அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த நகரில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களில் லட்சக்கணக்கானவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். அவர்களை வாகனங்களில் ஏற்றி 20 கி.மீற்றர் தூரத்திற்கு அப்பாலுள்ள இடத்துக்கு கொண்டு விடுகிறார்கள். பலர் ருவாண்டா நாட்டுக்குச் சென்ற வண்ணம் உள்ளனர்.

கடந்த தடவை எரிமலைக் குழம்புகள் ஊருக்குள் புகுந்ததும் மக்கள் கூட்டம் கூட்டமாக அலறியடித்து ஓடினார்கள். அப்போது ஏற்பட்ட நெரிசலிலும் பலர் உயிரிழந்தனர். அதுபோன்ற நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையில் அந்நாட்டரசு ஈடுபட்டுள்ளது.

 00



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106