மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே பயண அனுமதி – இறுக்கமான நடைமுறை தொடரும் என யாழ் மாவட்ட கொரோனா ஒழிப்ப செயலணி தெரிவிப்பு!

Friday, May 28th, 2021

பயணத் தடையின் போது மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே வாகனங்களுக்கு அனுமதி வழங்க வடக்கு மாகாண கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த செயலணி தெரிவித்துள்ளது.-

வட மாகாண கொரோனா  செயலணியினுடைய விசேட கூட்டமொன்று  இன்று காலை ஆளுநர் தலைமையில் சூம் செயலி மூலம் இடம்பெற்றிருந்தது.

குறித்த கூட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தற்போதுள்ள மாகாண நிலைமைகள், யாழ்.மாவட்ட நிலைமைகள் மற்றும் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அதேபோல் வடக்கு வைத்தியசாலைகளில் உள்ள நிலைமைகள் தேவைகள், குறைபாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு அதனுடைய குறைபாடு நிவர்த்தி செய்வதற்குரிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.

மேலும் வட மாகாணத்திலிருந்து அதிகளவான வாகனங்கள் வெளியேறுவதன் காரணத்தினால் பயணத் தடை காலத்தின் போது மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவுறுத்தல் மிக விரைவில் பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ளது .அதே நேரத்தில் கடல் மார்க்கமாக எல்லை மீறி பிரவேசிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போதைய யாழ்.மாவட்ட கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் கறித்த செயலணி தெரிவிக்கையில் –

யாழ் மாவட்டத்தில் கொரோனா நிலைமை சற்று அதிகரித்த நிலையில்  காணப்படுகின்றது நேற்று இரவு கிடைத்த பிசிஆர் பரிசோதனையின்படி யாழில் 27 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். யாழ் மாவட்டத்தில் இன்றுவரை தொற்றுக்குள்ளானோர்  2 ஆயிரத்து 729 ஆக  காணப்படுகின்றது தற்போது வரை  36 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதேநேரம் 2 ஆயிரத்த 526 குடும்பங்களைச் சேர்ந்த 6331 நபர்கள் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் யாழ் மாவட்டத்தில் மொத்தமாக நான்கு கிராமங்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே 80 மில்லியன் ரூபா பெறுமதியான உணவு பொதிகள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளது அதேபோல் இவ்வாரம் 11 மில்லியன் பெறுமதியான உணவுப்பொருட்களுக்கான நிதி கோரி விண்ணப்பித்துள்ளோம்.

அதேநேரத்தில் நடமாடும் விற்பனை நிலையங்கள் ஊடாக பொது மக்களுக்கு அனைத்து கிராமங்களிலும் உணவுப்பொருட்கள் விநியோகிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நடமாடும் வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் செயற்பாடு பிரதேச செயலர்கள் கிராம சேவகர்கள் முன்னெடுத்துள்ளனர். அத்தோடு வாகனங்கள் வாகன உரிமையாளர்கள் மற்றும் அந்த வாகனத்தில் பயணிப்போர் போன்ற விபரங்களை பிரதேச செயலர் ஊடாக விண்ணப்பித்து அதனை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை தவிர ஏனைய மிக மிக அத்தியாவசியமான வைத்தியசாலை செல்வோர் விமான நிலையங்களுக்கு செல்வோர் போன்றவர்களுக்கு மாத்திரம் பயணத்தடை  அனுமதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படுகின்றது.

ஏனையோருக்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவே பொதுமக்கள் ஏனைய விடயங்கள் தொடர்பில் அனுமதிக்காக விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் கறித்த செயலணி வலியுறுத்தியுள்ளது.

மேலும் யாழில்  கொரோனா இடைக்காலச் சிகிச்சை நிலையங்களை பொறுத்தவரையிலே கோப்பாய் அதேபோன்ற வட்டுக்கோட்டை சிகிச்சை நிலையங்கள் கொரோனா  இடைக்கால பராமரிப்பு நிலையங்களாக செயற்படுகின்றன கோப்பாயில் 229 க்கும் மேற்பட்டோரும்  வட்டுக்கோட்டையில் 199 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

எனவே அவர்களுக்குரிய வசதி வாய்ப்புக்கள் சுகாதார பிரிவினரால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதுடன் வெகுவிரைவில் நாவற்குழி இடைக்கால சிகிச்சை நிலையம் செயற்படத் தொடங்கும் எனவும் குறித்த செயலணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106