மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு – மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

Thursday, May 27th, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 128 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் இனங்காணப்பட்ட அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இதுவெனவும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 32 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் நிலையம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுணதீவு பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 14 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் ஆடைத்தொழிற்சாலையொன்றில் கடமையாற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

டெங்கு நோயை கட்டுப்படுத்த பொதுச் சுகாதார பிரிவினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - யாழ்....
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார காலத்தை நீடிக்கலாம் - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டு!
வீதியில் நெல்லை பரவிக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் வடமராட்சியில் ஒருவர் உயி...

ரஷ்யா - உக்ரைன் யுத்தம் - நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் அவசரமாக கூடுகிறது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்!
நாட்டின் பொருளாதார மீட்சியில் ஜப்பானுக்கு மிகமுக்கிய வகிபாகம் உண்டு – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துபவர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவர் - அமைச்சர் மனுஷ நாணயக்...