தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 14,766 பேர் இதுவரை கைது – பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!
Thursday, May 27th, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 587 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 14,766 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இராணுவத்தினர் 556 பேர் கைது!
சோளம், உருளைக்கிழங்கு, தேயிலைக்கு யூரியா விநியோகம் - 15 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கவும் தீர்மானம் என விவ...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டுப்பணத்தை மீளக் கையளிக்க நடவடிக்கை - தேர்தல்கள் ஆணைக்குழு!
|
|
|


