சினோபோர்ம், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி கொள்வனவிற்கு அமைச்சரவை அனுமதி!
Tuesday, May 25th, 2021
சினோபோர்ம் மற்றும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சீனாவிலிருந்து 14 மில்லியன் டோஸ் சினோபோர்ம் தடுப்பூசியும், 1 மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியையும் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டின் இறுதியில் மக்கள் தொகையில் 60% முதல் 70% பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக குறித்த கொள்வனவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீன அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட 5 இலட்சம் சினோபோர்ம் தடுப்பூசிகள் இன்று செவ்வாய்கிழமை இலங்கையை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஓட்டிசம் நோயாளர்களைப் பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், திணைக்கள...
சாரதி அனுமதி பத்திரம், வருமான வரிப் பத்திரம், வாகன காப்புறுதி புகை பரிசோதனை பத்திரம் ஆகியன சாரதிகள் ...
|
|
|


