27 ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது!
Saturday, May 22nd, 2021
நாடளாவிய ரீதியில் நாளை(சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது என தெரிவிக்கப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் 21 ஆம் திகதி இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது.
இதனையடுத்து மீண்டும் 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அமுல்படுத்தப்பட்டதை போன்று இந்த நடமாட்ட கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையிலேயே புகையிரத திணைக்களம் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
எல்லை மீள்நிர்ணய வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேலதிகமாக ஆராய தீர்மானம்!
ஆயுதப் பாசறையில் ஒன்றாக இருந்த நாம் மீண்டும் அரசியல் பாசறையில் ஒன்றிணைந்துள்ளோம் - கன்னி உரையில் ஜெ...
இலங்கையில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!
|
|
|


