ஏழாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு !
Wednesday, October 2nd, 2019
சம்பள பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(02) ஏழாவது நாளாகவும் தொடர்கிறது.
ரயில் இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், ரயில் நிலைய அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, இன்று(02) காலை 7 ரயில் சேவையில் ஈடுபடுத்தபபட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் ரயில் தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் இடையில் இன்று(02) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாக ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது.
அதன்படி, சம்பள பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 24ம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்சியாக தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
டில்ஷானுக்கு வந்த சோகம்!
புதிய கற்றல் முறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் - அமைச்சர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியு...
காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட இலங்கைக்கு ஆதரவு - பில் கேட்ஸ் தெரிவிப்பு!
|
|
|


