35 பேருடன் இந்திய விமானம் இலங்கை வருகை – அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
Wednesday, May 19th, 2021
கொரோனா பரவலுக்கு மத்தியில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் இந்திய விமானமொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
புதுடெல்லியில் இருந்து வருகைதந்துள்ள ஏர் இந்தியா விமான சேவைக்கு சொந்தமான இந்த விமானத்தில் 19 இலங்கையர்களும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் 16 உத்தியோகத்தர்கள் உள்பட 35 பேர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிவிவகார அமைச்சின் விசேட அனுமதியுடன் இலங்கைக்கு வந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
1,271 பேரின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தம்!
பெப்ரவரி மாதத்திற்குள் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்ப...
சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் நடமாடும் ஆய்வுக்கூட பேருந்துகள் சீனாவினால் அன்பளிப்பு!
|
|
|


