சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் நடமாடும் ஆய்வுக்கூட பேருந்துகள் சீனாவினால் அன்பளிப்பு!

Tuesday, September 27th, 2022

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கா பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய வதிகளைக் கொண்ட 8  நடமாடும் ஆய்வுகூட பேருந்துகள் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

அந்த வாகனங்கள் 660 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸென்ஹொங் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இந்த நடமாடும் ஆய்வுகூட பேருந்துகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்தநிலையில் வாகனங்களின் பணிகள் நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அநுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, குருநாகல், மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் நடமாடும் ஆய்வுகூடங்களுடன் கூடிய இந்த பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சிறுநீரக நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான திட்டத்தின் கீழ் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாளாந்தம் சுமார் 500 பேரை பரிசோதிக்க முடியும் என்பதுடன், மாவட்ட மட்டத்திலும் உள்ளூராட்சி மன்ற மட்டத்திலும் சிறுநீரக நோயாளர்களை அடையாளம் காண முடியும்.

இந்த நடமாடும் ஆய்வுகூட பேருந்துகளில் சீனாவினால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை சுகாதார ஊழியர்கள் பணிபுரிவதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106