கர்ப்பிணிகள் – பாலூட்டும் தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க அனுமதி – மகப்பேற்று வைத்தியர்கள் ஆய்வகத்தின் செயலாளர் தெரிவிப்பு!
Tuesday, May 18th, 2021
கர்ப்பினி தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
மகப்பேற்று வைத்தியர்கள் ஆய்வகத்தின் செயலாளர் விசேட வைத்தியர் சாமிந்த மாதொட கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகள் தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
இதன்போது கலந்துக் கொண்ட மகப்பேற்று வைத்தியர்களால் கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
இதற்கு அந்த குழு அனுமதி வழங்கியதுடன், இதற்கான திட்டம் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜி.எஸ்.பி வரியை நிறுத்த அமெரிக்கா முடிவு - அமெரிக்கா!
சைட்டம் மருத்துவ பட்டதாரிகளை பதிவு செய்யுமாறு உத்தரவு!
பேருந்துகளில் நடமாடும் வியாபாரம், யாகசம் பெறுவதற்கு தடை - இலங்கை போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பா...
|
|
|


