அடுத்த 10 நாட்களும் பயணங்களை முற்றாக நிறுத்திக்கொள்ளுங்கள் – பொது மக்களுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!
Tuesday, May 18th, 2021
தவிர்க்க முடியாத தேவைகளுக்காக அன்றி, பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேற வேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேநேரம் வெசாக் பண்டிகை முடியும்வரை பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகளைப் பேண வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பொதுமக்களின் ஆதரவு கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்த்துக்கொள்ள உதவியாக அமையும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் பொதுமக்கள் வீட்டிலிருந்து ஒத்துழைத்ததைப் போன்று, அடுத்த 10 நாட்களும் பயணங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
1,000 ரூபாயை வழங்க மறுக்கும் தோட்ட கம்பெனிகளின் ஒப்பந்தம் இரத்தாகும் - அரசாங்கம் எச்சரிக்கை!
வழமைக்கு திரும்பியது குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள்!
இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 100 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் பெப்ரவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் விடு...
|
|
|


