யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா – சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆறுமுகம் கேதீஸ்வரன்!

Monday, May 17th, 2021

வட மாகாணத்தில் நேற்றையதினம் 55 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 642 பேரின் மாதிரிகள் நேற்று (16) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும் வவுனியா மாவட்டத்தில் 11 பேரும் மன்னார் மாவட்டத்தில் 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் 6 பேருக்கு கொவிட்-19 தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

பேருந்து கட்டண திருத்தத்தை கணிப்பிடுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு இராஜாங்க அமைச்சர் திலும்...
கடன் மறுசீரமைப்பில் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பாராட்டியது ஐ.எம்.எப் - கடன் மறுசீரமைப்பு பேச்...
அனுமதிப்பத்திர விவகாரம் – ஈ.பி.டி.பியின் முன்னாள் எம்.பி திலீபன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!