அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைமுதல் 2 ஆம் தவணை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Sunday, October 4th, 2020
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் 2 ஆம் தவணைக்கான விடுமுறை நாளை திங்கட்கிழமைமுதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முன்பதாக அனைத்து பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் வௌ்ளிக்கிழமைமுதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி படுத்த்ப்பட்டதை அடுத்து கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புக்களை ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
இதனை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் நாளைமுதல் 2 ஆம் தவணை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ள விசேட அமைச்சரவை கூட்டம்!
தேர்தல் தாமதிக்கப்பட்டால் சிம்பாப்வேயில் நடந்ததே இங்கு நடக்கும் - நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசி...
சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகள் பொய்யானவை - தரமற்ற எரிவாயு சிலிண்டர்கள் சந்தையில் வெளியிடப்படாது...
|
|
|


