வன்னி மாவட்டத்தில் 6,682 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டம் அடுத்த ஆண்டு பூர்த்தி – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி!

Thursday, October 8th, 2020

வடக்கில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கான 6,682 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டம் அடுத்த ஆண்டு பூர்த்தியாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அத்துடன்  குறிதத  வேலைத் திட்டத்தை அரசாங்கம் முழுமைப்படுத்தி வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட பிரதமர்  – “கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கிற்கு இந்த வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் சில கால தாமதம் ஏற்பட காரணம் 2018 ஆம் ஆண்டில் வீடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2019 ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2020 ஆம் ஆண்டுக்கும் என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டுக்கென முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் 2021 ஆம் ஆண்டில் முழுமையாக பூர்த்தியாகும். எமது அரசாங்கம் அதற்கான நடவடிக்கையை எடுக்கும்” என்றும் பிரதமர் இதன்போது உறுதிபடத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106