தளர்த்தப்பட்டது பயணத்தடை – கடும் இறுக்கமான கட்டுப்பாடுகள் தொடருமென இராணுவத் தளபதி அறிவிப்பு!

Monday, May 17th, 2021

நாடளாவிய ரீதியில் 3 நாட்களாக அமுலில் இருந்த பயணத்தடை இன்று திங்கட்கிழமை அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டது.

இருந்தபோதிலும் இன்றுமுதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நாளாந்தம் இரவு 11 மணிமுதல் மறுநாள் அதிகாலை 4 மணிவரை பயணத்தடை அமுலில் இருக்குமென இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமையவே இன்றுமுதல் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் 1, 3, 5, 7, 9 என்ற ஒற்றை எண்ணாக இருக்குமானால், இன்று, நாளை மறுதினம் மற்றும் எதிர்வரும் 21, 23, 25, 27, 29, 31 ஆகிய திகதிகளில் வெளியில் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் 2, 4, 6, 8, பூச்சியம் என்ற இரட்டை எண்ணாக இருக்குமானால், நாளை மற்றும் 20, 22, 24, 26, 28, 30 ஆகிய இரட்டை இலக்க திகதிகளில் வெளியில் செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் குறித்த முறைமையை மீறுகின்றவர்கள் கைது செய்யப்படுவார்களென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வெளியில் செல்ல முடியும் எனவும் தொழிலுக்கு செல்பவர்கள் இந்த முறைமையைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையும் தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106