முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து தூக்கிக் கொண்டு செல்வதை நிறுத்துங்கள் – பொலிஸ் மா அதிபர் அவசர உத்தரவு!

Saturday, May 15th, 2021

நாட்டில் முகக்கவசம் அணியாதவர்களை பொலிஸார் கைது செய்து தூக்கிக் கொண்டு செல்வதை தொடரக்கூடாது என பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் சிறப்பு சுற்றறிக்கை மூலம் தகவல் அளித்துள்ளதாக பொலிஸ் தலைமையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இவ்வாறு நபர்களை தூக்கிச் செல்லும் போது பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இருந்தால் அவர் மூலம் தூக்கிச்செல்லும் அதிகாரிகளும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்களை ஒரே வாகனத்தில் கொண்டு செல்வதால் பலருக்கும் தொற்று பரவும் ஆபத்து உள்ளது என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இனிமேல், முகக்கவசம் இல்லாத நபர்களை அழைத்துச் செல்லக்கூடாது என்றும் கைது செய்யப்பட்டவர்களை ஒரே வாகனத்தில் கூட்டக்கூடாது என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106