2 இலட்சத்து 56 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டது – தொற்றுநோயியல் பிரிவு தெரிவிப்பு!
Saturday, May 15th, 2021
ஒக்ஸ்போர்ட் / அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று வெள்ளிக்கிழமை 11 ஆயிரத்து 385 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் 2 இலட்சத்து 56 ஆயிரத்து நான்கு பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி முழுவதுமாக போடப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்று 61 ஆயிரத்து 882 பேருக்கு சினோஃபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்ட நிலையில் குறித்த தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 2 இலட்சத்த 76 ஆயிரத்து 762 ஆக காணப்படுகின்றது.
இதற்கிடையில் 14 ஆயிரத்து 673 பேருக்கு ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கருணாவுக்கு விடுதலை!
ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகள் சேவையில்- நாளைமுதல் நடைமுறை என இராஜாங்க அமைச...
அரிசியின் விலை மேலும் அதிகரிக்க கூடும் - அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை - நிர்ணயவிலையில் வ...
|
|
|


