அரசியல் கட்சிகள் பதிவு தொடர்பான பரிசீலனை அறிக்கை 18ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் கையளிப்பு!
Monday, May 10th, 2021
அரசியல் கட்சிகளை பதிவு செய்வது தொடர்பான பரிசீலனை அறிக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நேர்முகத் தேர்வில் தெரிவான கட்சிகளின் பெயர்களை அறிக்கையொன்றின் ஊடாக வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் கடந்த சில நாட்களாக தேர்தல்கள் ஆணைக்குழு காரியாலயத்தில் இடம்பெற்றதுடன் அதில் 18 கட்சிகள் தகுதி பெற்றிருந்தன.
எவ்வாறாயினும், அதில் பெரும்பாலான கட்சிகள் நேர்முகத் தேர்வில் தேவையான காரணிகளை பூர்த்தி செய்யவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
20 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் ஆய்வு செய்ய விஷேட நிபுணர் குழு நியமனம்!
இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் – மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!
கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை - மதுரை உயர் நீதிமன்றம் அறிவிப்பு!
|
|
|
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்ட நபர்கள் தொடர்பில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்ப...
ஜூன் மாதத்தில் இதுவரை 549 டெங்கு நோயாளர்கள் அடையாளம் - சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு எச்சரிக்க...
யாருடைய நம்பிக்கையையும் உடைய இடமளிக்க மாட்டேன் - முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு!


