கொரேனானா தொற்று – மேலும் 15 பேர் பலி!
Monday, May 10th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நேற்று 2 ஆயிரத்து 659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 936 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் ஆயிரத்த 365 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 463 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடாநாட்டில் ஜனநாயக சூழ்நிலையை தோற்றிவித்தவர்கள் நாம் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செ...
வடக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா தொற்று - வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த...
மீண்டும் 22 முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!.
|
|
|


