வடக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா தொற்று – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!
Sunday, February 7th, 2021
வடக்கு மாகாணத்தில் 727 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மூவருக்கு மட்டும் கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 314 பேரின் மாதிரிகளும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 413 பேரின் மாதிரிகளும் நேற்று சனிக்கிழமை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூட பரிசோதனையில் அனைத்து மாதிரிகளிலும் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைக்கப்பட்டது.
அத்துடன், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடப் பரிசோதனையில் மூவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன் அவர்கள் மூவரும் வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் என மருத்துவ கேதீஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106