இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா ஒரே நாளில் 4 இலட்சத்து 14 ஆயிரத்து 188 பேருக்கு கொரோனா!
Saturday, May 8th, 2021
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2வது நாளாகவும் அதிகரித்துள்ளது. ஒரேநாளில் புதிதாக 4 இலட்சத்து 14 ஆயிரத்து 188 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4 இலட்சத்து 14 ஆயிரத்து 188 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 14 இலட்சத்து 91 ஆயிரத்து 598 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்றினால் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 915 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2 இலட்சத்து 34 ஆயிரத்து 83 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 76 இலட்சத்து 12 ஆயிரத்து 351 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக தற்போது 36 இலட்சத்து 45 ஆயிரத்து 164 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106