உரிய முறையில் வர்ணக் குறியீடு காட்சிப்படுத்தப்படாவிட்டால் நடவடிக்கை!

Tuesday, August 9th, 2016

அனைத்து வகையான மென்பானங்களிலும் அடங்குகின்ற சக்கரையின் அளவு தொடர்பிலான வர்ணக் குறியீடுகள் உரிய முறையில் காட்சிப்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய, இரு வாரங்களுக்கு நாட்டிலுள்ள அனைத்து சிற்றுண்டிச் சாலைகளிலும் விஷேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், பாடசாலைகளிலுள்ள சிற்றூண்டிச் சாலைகள் பரிசோதிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தூர இடங்களுக்கு செல்லும் பேருந்து தரிப்பிடங்களிலுள்ள சிற்றூண்டிச் சாலைகள் குறித்து அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அந்த உணவகங்களின் தரம் மற்றும் சுகாதாரம் தொடர்பில் இரு வாரங்களுக்கு ஒருமுறை பரிசோதிக்கும்படி, பொது சுகாதார பரிசோதகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பாலித்த மஹிபால குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


தலையில் இரும்புக் கம்பியால் பலமாக குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் இளைஞர் ஒருவர் யாழ். போதனாவில் அனுமதி...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு வருவதற்கு வெளியுறவு அமைச்சின் அனுமதி தேவையில்லை - இராணுவ ...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - 6 ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப...