அரசாங்கம் சமரசத்துக்கு முயன்றபோதும் புலிகளால் வர முடியவில்லை – ஐ.நாவில் இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, March 9th, 2021

இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் கலந்துரையாடல் நடத்த இலங்கை அரசாங்கம் முயற்சிகளை எடுத்ததாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் எனினும் அவர்களால் ஜனநாயகத்தின் பாதையில் செல்ல முடியவில்லை எனவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. புலிகளின் பயங்கரவாத செயல்கள் தொடர்ந்தன. இதனால் பல அப்பாவி உயிர்கள் பறிபோனதாகவும், இதனால் பல பொது சொத்துக்கள் அழிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு புலிகளுக்கு வெளியில் இருந்து ஆதரவு கிடைத்ததாக சுட்டிக்காட்டிய அவர் இதன் காரணமாக, இலங்கை மக்களை புலிகளின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக 2009 இல் ஒரு மனிதாபிமான நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், அந்த இருண்ட சகாப்தத்திலிருந்து இலங்கை வெகுதூரம் சென்று நாட்டில் அமைதியைக் கட்டியெழுப்ப தற்போது முடிந்துள்ளது எனவும் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106