இந்தியாவிலிருந்து இலங்கைக்கான பயணிகள் விமான சேவைகள் இடைநிறுத்தம்!
Thursday, May 6th, 2021
இந்தியாவிலிருந்து இலங்கைக்கான பயணிகள் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து உடன் அமுலுக்குவரும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் P.A. ஜயகாந்த குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் குறித்த அதிகாரசபை இந்தியாவில் ஏற்பட்டுள்ள COVID 19 நிலைமை மற்றும் உள்நாட்டு சுகாதாரப் பிரிவின் பரிந்துரைகளுக்கமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் P.A. ஜயகாந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியலமைப்பிற்கு முரணானது: வெளியானது தீர்ப்பு!
திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு பேருந்து!
வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் மீள் செலுத்தும் வீதம் 13 சதவீதத்தால் வீழ்ச்சி - நிதி இராஜாங்...
|
|
|


