கொவிட் நிதி வேறு எதற்கும் பயன்படுத்தமாட்டாது – அமைச்சர் நாமல் உறுதி!

Wednesday, May 5th, 2021

கொவிட் 19 தொற்றிற்கு எதிராகப் போராடுவதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அரசாங்கம் வேறு எந்த செயற்றிட்டத்திற்கும் பயன்படுத்தாது என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில் –

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து நிதிகளையும் நிதியமைச்சர் ஒதுக்கியுள்ளார்.

கொரோனா நிதியத்தினுடைய எந்தவொரு நிதியோ அல்லது வேறு எந்த நிதியோ கொவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தவிர உடல்வலு நிலையங்கள் அமைப்பதற்கென பயன்படுத்தப்படமாட்டாது.

பாதீட்டின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியே இத்திட்டத்திற்கென பயன்படுத்தப்படும். எப்படியாயினும் நாங்கள் இப்பொழுது கொள்முதல் செயன்முறையையே செய்து கொண்டிருக்கின்றோம்.

நாடு தழுவிய ரீதியில் உடல்வலு நிலையங்கள் அமைப்பதற்கென அமைச்சரவையினால் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 600 மில்லியன் தொகையினை கொவிட் 19 முன்னெச்சரிக்கை நடவடிக்ககைகளுக்காகப் பாவிக்க வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் பேசியதற்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106