தி.மு.க வின் எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
Monday, May 3rd, 2021
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் பத்து வருடங்களின் பின்னர் பல தொகுதிகளைக் கைப்பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் அபார வெற்றியை பெற்று முன்னணி வகிக்கின்றது.
இந்நிலையில்,தி.மு.கவின் தலைவர் ஸ்டாலின் தமது கட்சி எம்.எல்.ஏக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது கோவிட் காலமாக இருப்பதால் செவ்வாய்கிழமையன்று அண்ணா அறிவாலயத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அன்றையதினம் பதவியேற்புக்கான தேதி முடிவு செய்யப்படும் என்றும் ,பதவியேற்பு விழா எளிமையாக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நேற்றையதினம் வெளியாகிய நிலையில், திமுக கூட்டணி கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது
கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் தனது வெற்றிச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டதுடன்,அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் வெற்றிச்சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106