வடக்கில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று!
Tuesday, April 27th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி சாவகச்சேரியில் நால்வருக்கும், பருத்தித்துறையில் 2 பேருக்கும் தெல்லிப்பழையில் இருவருக்கும் சண்டிலிப்பாயில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும் மன்னார் மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற இருவருக்கு தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புலமைப்பரிசில் பரீட்சை: மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!
STF இற்கு புதிய கட்டளை அதிகாரியாக பிரதி பொலிஸ் மாஅதிபர் லயனல் குணதிலக்க நியமனம்!
தேர்தல் மற்றும் தேர்தல் கட்டமைப்பில் திருத்தம் - நாடாளுமன்ற சிறப்புக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்க ...
|
|
|


