வவுனியா பொது வைத்தியசாலைக்கு 261 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – அமைச்சர் டக்ளஸின் முயற்சியால் கிடைத்தது என ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!
Sunday, April 25th, 2021
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் மாடி கட்டிட நடவடிக்கைகாக 261 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
வவுனியா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட கட்டிடம் பூர்த்தியாகாமல் பாரிய பிரச்சினையை வைத்தியசாலையில் எதிர்நோக்கி வந்திருந்தனர்.
சுகாதார திணைக்களத்தினால் குறித்த விடயம் எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கட்ற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவினள் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு சென்றிருந்தேன்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சியுடன் இவ்விடயம் தொடர்பில் எடுத்துக்கூறியதற்கு அமைவாக 261 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில் முதல் கட்டமாக இவ்வருடம் 100 மில்லியன் ரூபாய்கான வேலைத் திட்டத்தையும், அடுத்த வருடம் 161 மில்லியன் ரூபாய்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வவுனியா வைத்தியசாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்தமைக்காக வவுனியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் மற்றும் வவுனியா பொது வைத்தியசாலை தலைமை மருத்துவர் ஆகியோரால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106