இலங்கையின் முதல் வாய்ப்பு பறிபோனது!
Monday, August 8th, 2016
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இலங்கை நீச்சல் வீராங்கனை கிமிகோ ரஹிம் தனது ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லும் சந்தர்ப்பத்தை தவறவிட்டுள்ளார்.
பெண்களுக்கான 100 மீற்றர் பின்னோக்கிய நீச்சல் போட்டியில் இரண்டாவது சுற்றில் 4 இடத்தை பெற்ற இவர் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளார். இவர் குறித்த பட்டியலில் 28 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டார்.
100 மீற்றர் தூரத்தை 1.04.21 என்ற நேரக்கணக்கில் நிறைவுசெய்து 4 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டார்.இதேவேளை இவர் குறிப்பிட்ட 100 மீற்றர் தூரத்தை தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் 1.03.78 என்ற நேரக்கணக்கில் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அணிக்கு தெரிவு செய்யப்பட்டாலும் மாலிங்கவுக்கு விளையாடும் வாய்ப்பு இல்லை - திலங்க சுமதிபால!
இலங்கை அணி வீரர்களுக்கு மஹானாம விடுத்துள்ள கோரிக்கை!
பாகிஸ்தான் அணிக்கு எதிராக திரில் வெற்றிபெற்ற இந்தியா!
|
|
|


