அரச வங்கி முறைமை வலுவாக பராமரிக்கப்பட வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!
Friday, April 23rd, 2021
அரச வங்கி முறைமை வலுவாக பராமரிக்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமர் அலுவலத்தில் இன்றையதினம் பிரகதி வங்கி ஊழியர்கள் சங்கத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விரிவான கலந்துரையாடலொன்றின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சவால் மிகுந்த சூழ்நிலைக்கு மத்தியில் அரச வங்கி முறையை வலுவாக பராமரித்தல் மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இச்சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் தொடர்ந்து நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்தும் இதன்போது பிரதமர் கவனம் செலுத்தியிருந்ததுடன் நிதி அமைச்சர் என்ற ரீதியில் அரச வங்கிகளில் தற்போது நிலவும் பிரச்சினைகளை தீர்க்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் 1996ஆம் ஆண்டுமுதல் இடைநிறுத்தப்பட்ட மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு, 2014 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இருந்த காலப்பகுதியில் மீண்டும் பெற்றுக் கொடுத்தமை தொடர்பில் பிரகதி வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தனர்.
குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, பிரதமரின் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் பிரியந்த ரத்நாயக்க, பிரகதி வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் நிசாந்த சமரசிங்க, தலைமை செயலாளர் ஏ.கே.பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
00
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106