நாடாளுமன்ற குழப்பநிலை தொடர்பில் ஆராய 7 பேர் கொண்ட குழு நியமனம்!
Friday, April 23rd, 2021
கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலைமை தொடர்பில் கண்டறிவதற்காக சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த குழுவில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, கெஹெலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, இம்தியாஸ் பாக்கிர் மக்கார், ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
போர்க் கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில்!
மானிய அடிப்படையில் இலங்கைக்கு பல கோடி இந்திய ரூபாய்கள்!
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி. முரளிதரன் நியமனம்!
|
|
|


