மாகாண சபைத் தேர்தலில் கட்சி ஒன்றில் மூன்று பேரை முன்னிறுத்துவதற்கு ஆளும்கட்சி இணக்கம்!
Wednesday, April 21st, 2021
மாகாண சபைத் தேர்தலில், தொகுதி ஒன்றுக்காக, கட்சி ஒன்றில் மூன்று பேரை முன்னிறுத்தும் யோசனைக்கு, ஆளும்கட்சி நாடாளுமன்றக் குழுவின் ஏகமனதாக இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடியபோதே, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
தொகுதி ஒன்றில் மூன்று பேரை முன்னிறுத்தி, அவர்களில் மக்களின் ஆதரவை அதிகம் பெறும் நபருக்கு, அந்த தொகுதியின் உறுப்பினராவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் 340 மருத்துவர்களுக்கு பற்றாக்குறை!
சீரற்ற காலநிலை - மன்னாரில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 1146 பேர் பாதிப்பு - மாவட்ட அனர்த்த முகாமைத்து...
ஆசிரியர் ஆட்சேர்ப்பு - கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு ...!
|
|
|


