வாகன விபத்துக்களால் 10 பேர் பலி!
Saturday, April 17th, 2021
நாட்டில் நேற்றைய தினம் வாகன விபத்துக்களினால் 10 பேர் மரணித்தனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அவர்களில் 5 பேர் நேற்று (16) இடம்பெற்ற விபத்துகளில் மரணித்தனர். ஏனைய ஐந்து பேர், நேற்றைய தினத்திற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களில், காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் என காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்று காலையுடன் நிறைவடைந்த 72 மணித்தியாலங்களில், வாகன விபத்துக்களினால் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 14 ஆம் திகதி 14 பேரும், 15 ஆம் திகதி 16 பேரும், நேற்றைய தினம் 10 பேரும் விபத்துக்களினால் மரணித்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
Related posts:
தொழிலுக்காக சென்றுள்ள மேலும் சிலர் குறித்து தகவல்கள் இல்லை!
எதிர்வரும் 14ஆம் திகதியன்று கத்தோலிக்க பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பு - பேராயர் மெல்கம் கர்தினல்...
A/L.மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல்!
|
|
|


