Saturday, April 17th, 2021
புத்தாண்டை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு!
புத்தாண்டை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு பிரதமர் தலைமையில் சுப நேரத்தில் நிறைவேற்றப்பட்டது
இந்நிகழ்வு பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (17) காலை நிகழ்த்தினார்.
காலை 7.16 மணிக்கு தெற்கு திசை நோக்கி நீல நிற ஆடை அணிந்து தலைக்கு ஆலம் இலை வைத்து ஆலம் சாறு மற்றும் எண்ணெய் வைத்து குளிப்பது இம்முறை புத்தாண்டு சடங்காகும்.
முதலில் புத்த மந்திரயவில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதனை தொடர்ந்து தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வில் ஈடுபட்டார்.
வரலாற்று சிறப்புமிக்க மாதன்வல ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய வெல்லகிரிய சுமங்கள தேரர் பிரதமருக்கு தலைக்கு எண்ணெய் தேய்த்து ஆசீர்வதித்தார்.
Related posts:
தண்டனை சட்டக் கோவையை திருத்த ஏற்பாடு!
மாணவர்கள் இன்மையால் வடக்கில் 103 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன - மாகாண கல்விப் பணிப்பாளர் தெ...
மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள காற்றாலை மின் திட்டங்கள் இரத்து - வெளிவரும் செய்திகள் தவறானவை -...
|
|
|


