பங்காளி கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் விரைவில் தீர்க்கப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை!

Thursday, April 15th, 2021

மே தினக் கொண்டாட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளுக்கு விரைவில் தீர்க்கப்படும் என தான் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்க கருத்து தெரிவித்தபிரதமர் மேலும் கூறுகையில் –

“ஏப்ரல் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அனைத்துக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு அரசியல் கூட்டணியின் உறுப்பினர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தங்களுடைய சொந்த நிலைப்பாடுகளையும் கருத்துக்களையும் வைத்திருப்பது இயல்பானது. இது புதியதொன்றல்ல.

அந்த அடிப்படையில் கூட்டணி கட்சிகள் பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடும். அப்படிக் கூறுவதால் கூட்டணியின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அர்த்தமல்ல” – என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106