கரவெட்டியைச் சேர்ந்த ஒருவர் உட்பட 2 பேர் கொரோனாவால் மரணம்!
Thursday, April 15th, 2021
நாட்டில் கொவிட்-19 தொற்றால் நேற்றையதினம் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதை தொடர்ந்துது கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளது.
ஹரிவட்டுன பகுதியை சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தார்.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் அவர் மரணித்தார்.
கொவிட்-19 நிமோனியா நிலை மற்றும் தீவிரமடைந்த சிறுநீரக நோய் இந்த மரணத்திற்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அத்துடன் கரவெட்டி பகுதியை சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவரும் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் கொவிட்-19 தொற்று மற்றும் குருதி விஷமானமை காரணமாக நேற்றைய தினம் அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106