10,000 கைதிகள் விடுவிக்கப்படும் சாத்தியம் – நீதி அமைச்சு துரித நடவடிக்கை!

Thursday, April 15th, 2021

போதைப்பொருள் விவகாரத்துடன் தொடர்புடைய 8000 இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டில் கடந்த 9 மாதகாலப்பகுதியில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் குறித்த அறிக்கைகள் கையளிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை நிறைவடைந்துள்ளதன் காரணமாக நிலுவையில் காணப்படும் வழக்குகளை இதனூடாக நிறைவு செய்யமுடியும் எனவும் நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக தடுப்புக்காவலில உள்ள சுமார் 10,000 கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் தற்போது நாளாந்தம் 1500 அறிக்கைகள் வெளியிடப்படுவதாகவும் நீதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறி;பிடத்தக்கது.

Related posts:

இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்வு! - சம்பிரதாய முறைகளைவிட மருத்துவ ஆலோசனைகளுக...
இலங்கையர்கள் அனைவரும் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ கோ...
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள், போதைப் பொருள் விற்பனைகளை கட்டப்படுத்த விரைந்து எடுக்க வேண்டிய நடவடி...

தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்காக அறிவார்ந்த எதிர்கால மாணவர் சந்ததியை உருவாக்குவதில் ஆசிரிய...
மழைக் காலத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் - தேசிய பாதுகாப்பு தொ...
நாட்டின் வருமானத்தில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை வழங்குவதால் எந்தச் செலவையும் மே...