கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 600 ஐ கடந்தது – புத்தாண்டு காலத்தில் எச்சரிக்கை அவசியம் என இராணுவத் தளபதி வலியுறுத்து!

Tuesday, April 13th, 2021

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில்

நாட்டு மக்கள் கோவிட் வைரஸ் தொற்றுத் தடுப்புக்கான சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்படும் பட்சத்தில், எதிர்வரும் மே மாதம் முதல் மிக மோசமான பெறுபேறுகளைச் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என கோவிட் வைரஸ் தொற்றுத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கோவிட் தடுப்புச் சட்டங்களை மீறி பொருள் கொள்வனவுகளில் ஈடுபடும் மக்கள் தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.

மக்கள் இவ்வாறு கட்டுப்பாடின்றி செயற்படும் பட்சத்தில், எதிர்வரும் மே மாதம் முதல் மிக மோசமான பெறுபேறுகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

சித்திரைப் புத்தாண்டு காலப் பகுதியில் கோவிட் தடுப்பு தொடர்பான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்படும் பட்சத்தில், வேறு எந்தவொரு பண்டிகைகளையும் கொண்டாட முடியாது போகும்.

பெருமளவான மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு காரணமாக நாடளாவிய ரீதியில் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த முடிந்தது எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106