வறட்சியான காலநிலை – மின்சார தேவை அதிகரித்துள்ளது என மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் தகவல்!
Tuesday, April 13th, 2021
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த மின்சார தேவை அதிகரித்துள்ளது என மின்சகத்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளது.
இருப்பினும் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டை அமுல்படுத்தப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் தொழிற்சாலைகள் மற்றும் பிற ஆலைகளின் செயற்பாடுகள் குறையும் என்பதால், நாளாந்த மின் தேவை குறையும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
20% நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாகவும், கிட்டத்தட்ட 40% லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மூலமாகவும் மின்சாரம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது என்று அவர் தெரிவித்து்ளளார்.
Related posts:
பொதுமக்கள் பார்வைக்குவரும் கொழும்பு துறைமுகம்!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு!
எதிர்வரும் சில வாரங்கள் நாட்டிற்கு மிகவும் சிரமமான காலம் - பிரதமர் ரணில் எச்சரிக்கை!
|
|
|


