நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் மான்னப்பெரும சத்தியப்பிரமாணம்!
Friday, April 9th, 2021
கம்பஹா மாவட்டத்தின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் மான்னப்பெரும சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடத்துக்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட விருப்புவாக்குப் பட்டியலில் 5 ஆம் இடத்தை பிடித்திருந்த அஜித் மான்னப்பெரும பெயரிடப்பட்டார்.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணைக்குழுவினால் நேற்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து, அஜித் மான்னப்பெரும இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையும் ஐக்கிய இராச்சியமும் வரலாற்றினால் பிணைக்கப்பட்டிருப்பதுடன் நீண்டகால நட்புறவைக் கொண்டிருக்க...
இலங்கையின் கடன் தொடர்பில், பொதுவான கட்டமைப்பின் கீழ் உரிய நேரத்தில் ஒழுங்கான செயல்முறைகளுக்கு சர்வதே...
118 என்ற பொலிஸ் துரித இலக்கத்துக்கு வழங்கப்படும் தவல்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது - பொலிஸ் ஊடகப் பேச...
|
|
|


