உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்கள் இரண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்!
Monday, April 5th, 2021
உலகின் மிகப் பெரிய இரண்டு எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தினை வந்தடைந்துள்ளன.
இதனால் உள்நாட்டு துறைமுக சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
பனாமா நாட்டின் கொடியுடன் பயணத்தினை மேற்கொள்ளும் வெஸ்ட் கரினா மற்றும் வெஸ்ட் பொலாரிஸ் ஆகிய இரண்டு எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்களுமே ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தினை வந்தடைந்துள்ளது.
நீண்டகாலத்திற்கு உபகரணங்களை திருத்துதல், திருத்தசேவைகளுக்காக ஒன்றரை வருடகாலத்திற்கு ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் நங்கூரமிட்டு இந்த இரண்டு கப்பல்களும் சேவைகளை பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
தினமும் 25 நிமிடங்கள் நடந்தால் புற்று நோயில் இருந்து தப்பிக்கலாம்!
திரையரங்குகளில் பிரச்சாரத்திற்கு தடை - தேர்தல் ஆணைக்குழு!
ஆகஸ்ட் 01 ஆம் திகதிமுதல் வெளிநாட்டு தபால் கட்டணம் அதிகரிப்பு - தபால் திணைக்களம் அறிவிப்பு!
|
|
|


