ஆகஸ்ட் 01 ஆம் திகதிமுதல் வெளிநாட்டு தபால் கட்டணம் அதிகரிப்பு – தபால் திணைக்களம் அறிவிப்பு!
Wednesday, July 20th, 2022
வெளிநாட்டு தபால்களுக்கான சேவைக் கட்டணத்தை ஆகஸ்ட் 01ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது
தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், வெளிநாட்டு தபால்களுக்கான சேவைக் கட்டணத்தை அதிகரிக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும் நான்கு நாடுகளின் தபால் பொருட்கள் மீதான கட்டுப்பாடு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு தபால் பொருட்களை ஏற்றுக்கொள்வது இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கைக்கான விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள மையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ் வருகிறார் பிரதமர்!
இன்று நள்ளிரவுமுதல் மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்யத் தடை !
சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து சமூகத்தை விடுவிக்க புதிய சட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் ...
|
|
|


