சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட தொடருந்து சேவைகள்!
Monday, April 5th, 2021
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் சௌகரியத்தை கருத்திற் கொண்டு எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதிமுதல் விசேட தொடருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கொழும்பு கோட்டை – பதுளை விசேட தொடருந்து சேவை இரவு 7.30 மணிக்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளதுடன். பதுளை – கொழும்பு கோட்டை விசேட தொடருந்து சேவை இரவு 9.00 மணிக்கு பதுளை தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
மேற்படி விசேட தொடருந்து சேவைகள் 09, 10, 11, 12,17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் கொழும்பு கோட்டை – யாழ்ப்பாணம் விசேட தொடருந்து சேவை இரவு 9.00 மணிக்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் என்றும் இந்த விசேட தொடருந்து சேவை 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் – கொழும்பு கோட்டை விசேட தொடருந்து சேவை இரவு 9.50 மணிக்கு யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும். அத்துடன் மேற்படி விசேட தொடருந்து சேவை 12, 15, 17, 19, 21 ஆகிய தினங்களில் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணம் – குருணாகல் விசேட தொடருந்து சேவை இரவு 12.30 மணிக்கு யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாவதுடன், இந்த விசேட தொடருந்து சேவை 12 ஆம் திகதி மட்டும் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106