கொள்ளையர்களிடமிருந்து பொருட்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்’டும் – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண வலியுறுத்து!

Monday, April 5th, 2021

தமிழ் – சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகும் வேளையில் , தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை கடைப்பிடிப்பதுடன் கொள்ளையர்களிடமிருந்து பொருட்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

தமிழ் – சிங்கள புதுவருட பிறப்புக்கு இன்னும் ஒரு வாரகாலமே உள்ளது. இந்நிலையில் மக்கள் தற்போது புதுவருட கொண்டாட்டத்துக்கான பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

கொவிட்-19 வைரஸ் பரவல் இன்னமும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில் மக்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை தொடர்ந்தும் கடைப்பிடிக்க வேண்டும்.

இதேவேளை , இந்தக் காலப் பகுதிகளில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களினால் மேற்கொள்ளப்படும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அதற்கமைய வீட்டை விட்டு வெளியேறும் போது , கொள்ளையர்களிடமிருந்து தமது பெறுமதி மிக்க பொருட்களை பாதுகாத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன்போது தங்க நகைகள் அணிந்து செல்பவர்கள் மேலும் அவதானத்துடன் இருக்க வேண்டும். பெண்கள் பயன்படுத்தும் கைப் பைகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். கொள்ளையர்கள் பல்வேறு முறைகளை கையாண்டு அவற்றை கொள்ளையிடுவதற்கு வாய்ப்புள்ளஎன்றும் தெரிவித்தள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் மோட்டார் சைக்கிள்கள் , சைக்கிள்கள் , முச்சக்கர வண்டிகள் உட்பட வாகன கொள்ளைகளும் தற்போது பதிவாகி வருவதாகவும் இதனால் வாகனங்களில் செல்பவர்களும் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லும்போது அவதானத்துடன் செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106