அனைத்து அஞ்சல் சேவையாளர்களின் விடுமுறைகளும் இரத்து – தொலைத்தொடர்பு சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் சிந்தக்க பண்டார!
Wednesday, March 31st, 2021
சில அஞ்சல்துறை தொழிற்சங்கங்கள், நேற்று நள்ளிரவுமுதல் 24 மணிநேர சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் சிந்தக்க பண்டார தெரிவித்தள்ளார்.
ஆட்சேர்ப்பு முறைமையில் நிலவும் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும், உடன் அமுலுக்குவரும் வகையில் அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து பணிக்குழாமினரின் விடுமுறைகளையும் இரத்துச் செய்வதற்கு அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன நேற்று நடவடிக்கை எடுத்துள்ளார்.
அஞ்சல் தொழிற்சங்க நடவடிக்கையால், அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய நேற்று நள்ளிரவுமுதல் இன்று நள்ளிரவுவரை, அனைத்து அஞ்சல் சேவையாளர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
உடல்நலக் குறைப்பாட்டினால், சேவைக்கு சமுகமளிக்க முடியாத சந்தர்ப்பத்தில், அரச வைத்திய சான்றிதழ் முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106