கிளிநொச்சி – பளை பிரதேசத்தில் கோர விபத்து – தந்தை இரு மகன்கள் பலி!
Saturday, March 27th, 2021
கிளிநொச்சி – பளை – இத்தாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
ஏ-9 வீதியில் பயணித்த பாரவூர்தி ஒன்றும், கார் ஒன்றும் மோதியதில் நேற்றிரவு 9.15 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குறித்த காரிரை செலுத்திய 38 வயது நபரும், அவரின் 11 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகன்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தை அடுத்து, பாரவூர்தியின் சாரதி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விதை நெல்லுக்குப் பற்றாக்குறை : நெற்செய்கையாளர்கள் பாதிப்பு!
இன்றுமுதல் மீண்டும் தேசிய அடையாள அட்டை விநியோக ஒருநாள் சேவை ஆரம்பம் - ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பு!
தனியார்த்துறையின் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வேண்டும் - மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டு...
|
|
|


